Kaju Katli Recipe in Tamil | Deepavali Sweets Recipes
காஜூ கத்லி
தேவையான பொருட்கள்
1 கப் முந்திரி
1/2 கப் சர்க்கரை
1/4 கப் தண்ணீர்
1-2 தேக்கரண்டி பால் (தேவைப் பட்டால் மட்டும்)
நெய் தொட்டுக்கொள்ள (தேவைப் பட்டால் மட்டும்)
செய்முறை
முந்திரி பருப்பை மிக்சியில் நைசாக பொடிக்கவும்.
நிறைய நேரம் அரைக்கக்கூடாது, கட்டி கட்டியாகிவிடும். அதே போல, fridge லிருந்து எடுத்து உடனே அரைக்கக்கூடாது.
சர்க்கரை, தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில், ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
பொடித்த முந்திரியை அதில் சேர்க்கவும்.
3-4 நிமிடம் மிதமான தீயிலே கிளறவும். கைகளில் தண்ணீர் தொட்டுக்கொண்டு, உருட்டிப்பார்த்தால், ஒட்டாமல் உருட்ட வர வேண்டும். இது தான் பதம்.
பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, மேலும் கெட்டியாகும் வரை கிளறவும்.
மாவு போல திரண்டு வரும் பொழுது, உடனே ஒரு சப்பாத்தி திரட்டும் கல்லில் மாற்றவும்.
உடனே ஒரு கரண்டி கொண்டு பிசையவும். ஆறிவிட்டால் கட்டி பிடித்துவிடும்.
மிகவும் உதிரும் படி தெரிந்தால், பால் சேர்த்து பிசையவும்.
நன்கு ஒட்டாத மாவாக பிசைந்த பிறகு, butter பேப்பரில் மெல்லிதாக திரட்டவும்.
அதை diamond வடிவில் கதியில் வெட்டினால் காஜூ கத்லி தயார்.
அரைத்தவுடன் பார்க்க கொரகொரவென்று இருக்கிற மாதிரி தெரியும். ஆனால் பிறகு சரியாகி விடும். அதே போல பிசையும் வரை பார்க்க சிறிது smooth ஆக இல்லாதது போல தெரியும். ஆனால் பிசைந்தவுடன் சரியாகிவிடும்.
source